×

உச்சநீதிமன்றத்தில் அதானி நிறுவன வழக்கை பட்டியலிடாததால் பரபரப்பு: யார் உத்தரவால் இப்படி நடக்கிறது? நீதிபதிகள் காட்டமான கேள்வி

புதுடெல்லி: ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கும், அதானி பவர் ராஜஸ்தான் லிமிடெட் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட பிரச்னையை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் நிறுவனம் சார்பில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பிவி சஞ்சய் குமார் அமர்வில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே கூறுகையில், உதவி பதிவாளரை அணுகி வழக்கு பற்றி கேட்ட போது, அதானி நிறுவன வழக்கை பட்டியலிட வேண்டாம் என தனக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதை கேட்டு நீதிபதிகள் வருத்தம் அடைந்தனர். இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது,’ஏன், யாருடைய உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரணைக்கு நீதிமன்ற பதிவுத்துறை பட்டியலிடவில்லை என்பதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது.யாருடைய விருப்பப்படி? ஏன், எதற்காக நீதிமன்ற பதிவுத்துறை இப்படி யாரால் இயக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற பதிவுத்துறை உயர் அதிகாரியை நீதிமன்றத்திற்கு வரவழைத்து, அவருடன் அறைக்குள் விவாதித்தார்கள். அதன்பின் இந்த வழக்கு இன்று முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

The post உச்சநீதிமன்றத்தில் அதானி நிறுவன வழக்கை பட்டியலிடாததால் பரபரப்பு: யார் உத்தரவால் இப்படி நடக்கிறது? நீதிபதிகள் காட்டமான கேள்வி appeared first on Dinakaran.

Tags : Adani ,Supreme Court ,New Delhi ,Jaipur Vidyut Vidran Nigam Limited ,Adani Power Rajasthan Limited ,Jaipur Vidyut Vidran Nigam Limited… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி...